மாலியில் தொடரும் இனக்குழுக்களுக்கிடையிலான வன்முறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இரங்கலை தெரிவித்துள்ளது. மாலியின் மொப்டி நகரில் வன்முறையால் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 300 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.