மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலய வீதிக்கு அண்மையில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண்ணிடமிருந்து 10.200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர் 46 வயதுடைய களனி பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்