மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். கடல்தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மீன்பிடி துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. எரிபொருள் விலை சூத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் போது கடல் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொள்வதனை கண்டறிவதற்காக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் கடல்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரத்து 500 கடல் தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் அமைச்சர் அங்கு கருத்து வெளியிட்டார். அனர்த்தங்களின் போது கடல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறை
படிக்க 1 நிமிடங்கள்