ஒரு கோடியே 90 இலட்சத்துக்கும் அதிக பெறுமதி வாய்ந்த தங்கத்தை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
டுபாயிலிருந்து வருகை தந்த இரண்டு பயணிகள் 3 கிலோ நிறை கொண்ட தங்கத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளனர். இவர்கள் கொழும்பு மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 29 தங்க கட்டிகளை எடுத்து வந்த போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையை தொடர்ந்தே இத்தங்கம் கைப்பற்றப்பட்டது