fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கலக்கப்போவது யார்?-மகுடம் யாருக்கு?

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2018 14:27

கலக்கப்போவது யார்?-மகுடம் யாருக்கு?

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2018 இன்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் எதிர் குரோ ஷியா அணிகள் மோதுகின்றன.

இலங்கை நேரப்படி இரவு 08.30 மணிக்கு நேரடி ஒளிஃஒலிபரப்புகள் ஆரம்பமாகின்றன.

ஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலுள்ள டுரணாnமைi உதைபந்தாட்ட அரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. மிகப் பெரிய அரங்கமாக கருதப்படும் இதில் 81,000 பேர் அமரக்கூடிய வசதி உண்டு.

உலகிலுள்ள கோடிக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள இந்தப் போட்டிiயு இலங்கையிலும் கண்டுகளிக்க அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரையிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 1–0 என பெல்ஜியத்தையும், குரோஷியா 2–1 என இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன.

பிரான்ஸ் கடந்த 1998 இல் சாம்பியன் பட்டம் வென்றது. 2006 இல் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. தற்போது மூன்றாவது முறையாக இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் குரோஷியா கடந்த 1998 இல் மூன்றாம் இடம் பெற்றது. தற்போது இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இனறைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அதேநேரம் எதிர்பாராத இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து போர்த்துக்கல் மற்றும் ஆர்ஜன்டினா அணிகள் அரையிறுதிக்குள் நுழையாமல் வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.ஆனால் எந்த அணி இன்றை போட்டியில் வெற்றியீட்டுமென குறிப்பிட முடியாதுள்ளது.ஏனெனில் இரு அணிகளுமே பலமான நிலையிலுள்ளது.அதேநேரம் இரு அணி ரசிகர்களையும் இன்றைய போட்டி பெருத்த எதிர்பார்ப்பை கொடுக்குமென கால்பந்து விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 15, 2018 14:27

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க