fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 16:41

மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்..

மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அமைச்சரவை அனுமதியுடன் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நகல்பிரதி பாராளுமன்ற சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்லவிடம் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டவுடன், இரண்டாம் வாசிப்பு மீது விவாதம் நடத்தப்படும். அதன் பின்னர் வாக்கெடுப்பு மூலம் சட்டமூலம் நிறைவேற்றப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபையை அமைப்பதன் மூலம் மலையகத்தில் பல்வேறு சேவைகளை இலகுவாக முன்னெடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 16:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க