fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காணாமல்போனோர் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் மற்றுமொரு கட்டம் இன்றைய தினம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 15:15

காணாமல்போனோர் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் மற்றுமொரு கட்டம் இன்றைய தினம்

காணாமல்போனோர் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் மற்றுமொரு கட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகிறது. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அமர்வு இடம்பெறுவதாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். அமர்வில் காணாமல்போனோர்களது உறவினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை நாளைய தினம் கிளிநொச்சியில் காணாமல்போனோர்களது உறவினர்களினடம் கருத்துக்கள் பெறப்படவுள்ளன. காணாமல்போனோர் தொடர்பான அலுவலக செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. பொதுமக்களின் கருத்துக்களை கேட்டவதற்கான அமர்வுகள் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்கள் திரட்டப்பட்டன. அத்துடன் அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனோர் தொடர்பான கருத்துக்களை கேட்டறியும் அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 15:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க