fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 11:56

இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் பலி

குடாஓய மற்றும் கொவிதுபுர பிரதேசத்தில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொவிதுபுர – உனானயாய போவல பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு முன்னால் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ பகுதியை சேர்ந்த நபரென தெரியவந்துள்ளது.

இதேவேளை வெல்லவாய குடாஓய பிரதேசத்தில் மூவருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை மோதலாக மாறியதில் 52 வயதான நபரொருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குடாஓய பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் ஏனைய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 11:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க