fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முற்பட்ட நபர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 11:47

பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முற்பட்ட நபர்கள் கைது

பிறந்த குழந்தையை விற்பனை செய்ய முற்பட்ட மூன்று பெண்கள் உட்பட நால்வர் ராகம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிறந்து 15 நாட்களே ஆன குறித்த குழந்தையை இரண்டு இலட்சத்து, 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டதாக சந்தேக நபர்கள் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையின் தாய், பாட்டி, தாத்தா மற்றும் தரகுப்பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ராகமை மற்றும் மஸ்கெலிய பகுதிகளை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை இன்றைய தினம் நீர்க்கொழும்பு நீதவான் நீதமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 14, 2018 11:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க