கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்; இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ளதோடு, கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை இம்முறை உயர்தர பரீட்சையில் மூன்று மணித்தியால வினாத்தாளை வாசித்து புரிந்துக்கொள்வதற்கென 10 நிமிடங்கள் மேலதிகமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் இன்று முதல் பாடசாலைகளுக்கு..
படிக்க 0 நிமிடங்கள்