வட மாகாணத்தில் நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அனுராதபுரம், வவுனியா ஊடாக பிரதான மின் விநியோக மார்க்கங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த பணிகள் காரணமாக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இரு தினங்களிலும் காலை 08.00 மணிமுதல் மாலை 5 மணிவரையான 9 மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும். வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே மின் விநியோகம் தடைப்படும். குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் மின் துண்டிப்பை கருத்திற்கொண்டு முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வடக்கில் நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு
படிக்க 0 நிமிடங்கள்