பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர் கைது
Related Articles
பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர், கல்கிஸ்ஸை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கற்கைக்கென கெனடாவுக்கு அனுப்புவதாக கூறி அவர் 15 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் இன்றைய கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.