தாய்லாந்து – இலங்கை பிரதமர்கள் சந்திப்பு
Related Articles
தாய்லாந்து பிரதமர் பிரயூத் ச்சான் ஓ ச்சா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து கண்டிக்கு செல்லவுள்ள பிரதமர், தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெறவுள்ளார். அதன் பின்னர் பேராதனை தாவரவியல் பூங்கா மற்றும் கண்ணொருவை விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்யவுள்ளார்.