இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம்
Related Articles
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணம் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நிலவில் படாமல் நேரடியாக பூமயின் வளிமண்டலத்தின் மேல் பட்டு அந்த கதிர்கள் நிலவின் மேல் படும். அதனால்தான் அது சிவப்பு நிறத்தில் தென்படுகிறது. இது மற்றைய சந்திர கிரகணங்களை போலல்லாமல் பூமியின் நிழல்களை கடந்து செல்லும் வரை நமது நேரடியாக தென்படும். 82 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதோடு இது அதிசயமாகவும் இருக்குமென நாசா மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த கிரகணத்தை எதிர்வரும் 27ஆம் திகதி பின்னிரவிலிருந்து 28ஆம் திகதி அதிகாலை வரை பார்வையிட முடியும். மத்திய கிழக்கு நாடுகள் தென் அமெரிக்கா ஆசியா மற்றும் ஆபிரிக்க கண்டத்தில் வாழும் மக்கள் பார்வையிட முடியும். ஆர்டிக் மற்றும் பசுபிக் கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் இதனை பார்வையிட முடியாது. இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி சந்திர கிரகணம் தென்பட்டது. மீண்டும் இமமாதம் 27ஆம் திகதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. எதிர்வரும் 27ஆம் திகதி தோன்றும் இந்த சந்திர கிரகணம் சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment