முதல் இன்னிங்சில் இலங்கை 287 ஓட்டங்கள்
Related Articles
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.13 நான்கு ஓட்டங்கள் ஒரு சிக்ஸர் அடங்கலாக அவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றார்.ஏனைய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.161 ஓட்டங்களுக்கு இலங்கையணி 6 விக்கட்டுக்களை இழந்திருந்த வேளை மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி சற்று தாமதமாகியது.பந்துவீச்சில் ரபடா 4 விக்கட்டுக்களை வீழ்தியதோடு ஷம்சி 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.தனது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் தென்னாபிரிக்க அணி 4 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை இழந்திருந்த வேளை இன்றை நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.ரங்கன ஹேரத் ஒரு விக்கட்டினை வீழ்தியிருந்தார்.நாளை போட்டியின் 2ஆம் நாளாகும்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment