Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சோம்பலை விரட்டுவோம்.. சுறுசுறுப்புடன் வாழ்வோம்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 14:59

சோம்பலை விரட்டுவோம்.. சுறுசுறுப்புடன் வாழ்வோம்..

எந்த ஒரு வேலையையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு அனுபவம்தான் சோம்பல். அத்துடன் மிகவும் களைப்பாக காணப்பட்டால் தானாகவே சோம்பல் ஏற்படுகின்றது.

சோம்பலை ஏற்படுத்தும் காரணிகள்

சோம்பலாக இருப்பதற்கு காரணம் வேலை, பயணம், வயது, தூக்கம், போதியளவு ஊட்டச்சத்து இல்லாமை, ஒவ்வாமை, தொற்றுக்கள், இரத்தசோகை, தையிரோயிட் அளவு குறைவடைதல், இருதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்றவையே. உடம்பு வலி, சமிபாட்டு பிரச்சினை, இரத்த அழுத்தம், போதியளவு தூக்கமின்மை, சரும நிறமாற்றங்கள், தலைவலி போன்றவற்றை வைத்து நாம் சோம்பலாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

சோம்பலை போக்குவதற்கான எளிய நடைமுறைகள்

1. விட்டமின் பி உணவுகள். மெட்டபோலிசம் உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு முக்கிய பங்கை வகிக்கிறது. மெட்டபோலிசத்தை அதிகரிக்கச் செய்யும் விட்டமின் பி உள்ள உணவுகளான பீன்ஸ், முழு தாணியம், பால் பொருட்களை உட்கொள்வது சிறந்தது.

2. தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெய்யில் நல்ல கொழுப்புக்கள் காணப்படுவதனால் உடலிற்கு சக்தியை வழங்கி சோம்பலை விரட்டுகிறது. நீங்கள் சமைக்கும் உணவுகளில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவது சிறந்தது.

3. விட்டமின் சி செறிந்துள்ள உணவுகள். விட்டமின் சி சிறந்த ஆண்டிஒக்ஸிடன் தன்மை கொண்டுள்ளதால் சோம்பலிற்கு எதிராக செயற்படுவதுடன், cortisol உருவாக்கத்தை அதிகரிக்கவும் செய்கிறது. விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான கிவி, திராட்சை, தோடம்பழம், எலுமிச்சப்பழம், ஸ்ரோபரி, தக்காளி போன்றவற்றை உட்கொள்வது சிறப்பானது.

4. நீர்ச்சத்து உள்ள உணவுகள். உடல் சிறப்பாக தொழிற்படுவதற்கு நீர் இன்றியமையாதது. நீர் உடலில் சக்தியை அதிகரிக்கச் செய்து சோம்பலை விரட்டுகின்றது. நீரை அதிகம் உட்கொள்வதனால் உடல் வறட்சி அடையாமல் பாதுகாக்க முடியும். நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசனி போன்ற பழங்கள் மற்றும் காய்வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்.

5. மக்னீசியம் செறிந்த உணவுகள். மக்னீசியம் உடலில் உள்ள குளுக்கோஸி சக்தியாக மாற்றுவதுடன் உடலின் சக்தியையும் திண்மையையும் மாற்றவல்லது. எனவே மக்னீசியம் நிறைந்த உணவுகளான கடலை, பீன்ஸ், மீன், சோயா, வாழைப்பழம், அவகோடா, சாக்லேட்டை எடுத்துக் கொள்ளவும்.

6. உடற்பயிற்சி. உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் சோம்பலையும் விரட்டுகிறது. நீச்சல், ஓடுதல், நடத்தல், நடனம் ஆடுதல் போன்றவை சிறப்பான உடற்பயிற்சிகள்.

7. தியானம். அதிகாலையில் தியானம் செய்வதனால் உடலிற்கு தேவையான சக்தியைப் பெறுவதுடன் சோம்பலில் இருந்து தீர்வைத் தருகிறது.

இணையம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 14:59
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க