fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 12:41

கிராமசக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திற்கு பல்வேறு நன்மைகள்

கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திலுள்ள தனியார் பிரிவுகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. வறிய மக்கள் வாழ்கின்ற பிரதேச செயலக காரியாலயங்களை இலக்கு வைத்து வெற்றிகரமாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் கிராம சக்தி மக்கள் வேலைத்திட்டத்தின் மத்திய மாகாணத்திற்கான மீளாய்வு குழு கூட்டம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு இணக்கப்பாட்டு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இங்கு மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 12, 2018 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க