fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவின் அதிசய பாம்புக்கிரமம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 19:02

சீனாவின் அதிசய பாம்புக்கிரமம்

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள குட்டி கிராமம் சிசிகியாவ். இந்தக்கிராமத்தில் சுமார் 600 பேரே வந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஏன் இந்த நிலை? இனி இது தொடர்பில் பார்க்கலாம்.,

இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. நிலப்பரப்பில் மட்டுமின்றி, இங்குள்ள நீர்நிலைகளிலும் மீன்களைவிட அதிகமாக காணப்பட்டது. அத்துடன் சீனர்களின்அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு என்பதும் குறிப்பிட்டு கூறக்கூடியது . பசிக்கு உணவாக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு பெரும் வருமானத்தை ஈட்டிகொடுத்தது.  இதனால்,  மக்கள் இந்த கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே அழைக்க தொடங்கி விட்டனர். இறைச்சியாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் பாம்புகள் பயன்படுவதால் பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் பல்கிப் பெருகியது.

குறிப்பாக, கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், அதிகமான விலைக்கு வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதால், இங்கு வீட்டுக்குவீடு பெரியதும், சிறியதுமாக பாம்பு வளர்ப்பு தொழில் குடிசைத்தொழிலாகவே மாறிப்போனது.இங்குள்ள  மக்கள் சுமார் 30 லட்சம் பாம்புகளுடன் இரவும், பகலும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பண்ணைகளில் சேகரிக்கப்படும் கொடிய பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால், வேறு எந்த தொழில் செய்வதையும்விட பாம்புப் பண்ணை தொழில்தான் சிறப்பானது  எனவே, இந்த தொழிலை ஒருநாளும் கைவிடப் போவதில்லை என்று இந்த கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 19:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க