காலி மீன் பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் 7 பேர் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
நேற்றிரவு மாலைதீவு கடற்பகுதியில் வைத்து இம்மீனவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. காலி மீன் பிடி துறைமு:கத்திலிருந்து சிந்தூர் எனும் படகில் இம்மீனவர்கள் கடந்த 14 ஆம் திகதி கடலுக்கு சென்றனர். இப்படகுடன் கடலுக்கு சென்ற மற்றொரு படகு கரை திரும்பிய போதும் சிந்தூர் படகு தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இம்மீனவர்களை தேடும் பணியில் கடற்படை ஈடுபட்டது. இதன் பிரகாரம் மாலைதீவுக்கு அருகிலுள்ள கடலில் குறித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். இம்மீனவர்கள் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளியிட்டனர்.