fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரை பாதுகாக்க முறையான திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 13:28

வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரை பாதுகாக்க முறையான திட்டம்

வரைமுறையற்ற விதத்தில் இலாபம் உழைக்கும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்கு முறையான திட்டமொன்றை வகுக்க தேசிய பொருளாதார சபை அவதானம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற தேசிய பொருளாதார சபை கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டது.

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பை அதிகரிப்பதற்காக ஏற்றுமதி ஊக்குவித்தல் மற்றும் இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் வரிக் கொள்கையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக அதிக சலுகைகளை வழங்குவதற்கும், ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க கூடிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது, வரி அல்லது கட்டணம் எதுவும் அறவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இதன் மூலம் அன்னியச் செலாவனியை அதிகரிப்பதே நோக்கமாகும். கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரை எரிபொருளை விநியோகிக்கும் குழாய்களை நிர்மாணிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதேவேளை ஜப்பான் அரசின் உதவி திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 2030 ஆம் ஆண்டு வரைக்கான மின் சக்தி திட்டம் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனச்சி சுகனுமாவினால் ஜனாதிபதியிடம் இவ்வைபவத்தில் வைத்து வழங்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 11, 2018 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க