fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காணாமல் போன மீனவர்கள் மாலைதீவை அண்டிய கடலில் மீட்கப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2018 20:48

காணாமல் போன மீனவர்கள் மாலைதீவை அண்டிய கடலில் மீட்கப்பட்டனர்.

காலி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்று காணமல் போன 7 மீனவர்களும் மாலை தீவை அண்டிய கடலில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வர துரித நடவடிக்கை எடுக்கப்படுமென இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார்.

காலி மீனவர் துறைமுகத்திலிருந்து சிந்தூர் 2 எனும் படகில் கடந்த 14 ம் திகதி இவர்கள் கடலுக்கு சென்றனர். சில நாட்களாக அவர்களுக்கும் கரைக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. அந்த படகுடன் கடலுக்கு சென்ற ஏனைய படகுகள் கரைக்கு திரும்பிய போதிலும் சிந்தூர் 2 எனும் படகு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து அந்த மீனவர்களை தேடி கடற்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில் மாலைதீவை அண்டிய கடலில் வைத்து இம் மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்

சிந்தூர் 2 எனும் படகை நாம் கடந்த சில நாட்களாக தேடிவந்தோம். சில மணி நேரங்களுக்கு மாலை தீவின் தென்பகுதியிலிருந்து படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எமது கடற்தொழிலாளர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளதாக மாலை தீவு தூதுவர் அறிவித்துள்ளார். கரையோரப் பாதுகாப்பினரின் மீட்பு படகு இன்னும் ஒரு சில மணிநேரத்தில் அந்த படகை நெருங்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மீனவர்கள் காணமல் போன செய்தியை முதலில் ஐரிஎன் தொலைக்காட்சியே அறிவித்தது. இதன் அடிப்படையில் அரசாங்கம் தலையிட்டு அந்த மீனவர்களை கண்டுபிடிக்க முடிந்தது. உண்மையிலேயே அதனையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் மீனவ குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 10, 2018 20:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க