சி.எஸ். அமுதன் இயக்கியிருக்கும் படம் தமிழ்படம் 2. படக்குழுவினர் தமிழ் படங்களின் ஹிட் காட்சிகள் மற்றும் சம்பவங்களை கலாய்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருந்தனர். இந்தவகையில் தற்போது படம் ரிலீஸ் திகதிக்கு விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் போஸ்டரை கலாய்த்து வெளியிட்டிருக்கிறார்கள். விஜய் காரில் லேப்டாப் பார்ப்பது போல் இருக்கும் சர்கார் போஸ்டரை, சிவா சைக்கிள் ரிக்ஷாவில் லேப்டாப் பார்ப்பது போல் அமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் அதில் ஜூலை 12ம் தேதி படம் ரிலீஸ் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.