ஜப்பானில் வெள்ள அனர்த்தம் பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு
Related Articles
ஜப்பானில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ள நீரில் சிக்கி அதிகளவானோர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜப்பானின் ஹிரோஸிமா, கியாட்டோ, ஒக்காயோ மற்றும் எஹிமே உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ள அனர்த்த நிலையில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்த 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களை வேறுபாடின்றி காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.