fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் உரை நிகழ்த்தினார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2018 13:37

சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் உரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூரில் ஆரம்பமான சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார்.

புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிரந்தர நகரங்களை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச நகர மாநாடு நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் இடம்பெறும் இம்மாநாட்டிற்கு இணைவாக சர்வதேச நீர்பாதுகாப்பு நினைவு தின வைபவம் மற்றும் து{ய்மை சுற்றாடல் மாநாட்டிலும் பிரதமர் பங்குபற்றவுள்ளார். இவ்விஜயத்தின் போது பிரதமர் சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங், பிரதி பிரதமர் தர்மன் ஷண்முகரத்னம், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ ச்சொக் டொன் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம, பிரதி அமைச்சர் அநோமா கமகே ஆகியோரும் பிரதமருடன் சிங்கப்பூர் விஜயத்தில் இணைந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 9, 2018 13:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க