தந்தையை கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் இரு மகன்கள் கைது
Related Articles
தந்தையை கொலைசெய்த சந்தேகத்தின்பேரில் இரு மகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம – பொல்கொட கால்வாயில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த ஆணொருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் பண்ணிப்பிட்டிய தெபானம பகுதியை சேர்ந்த 52 வயதான நபரென தெரியவந்துள்ளது. கொலை தொடர்பில் அவரது 22 மற்றும் 28 வயதான மகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் பாணந்துரை நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.