fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2018 15:04

ட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 16ம் திகதி, பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்திப்பு இடம்பெறுமென வெள்ளை மாளிகை கடந்த மாதம் அறிவித்தது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இதனை உறுதிசெய்துள்ளார். சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு, சிரியா, உக்ரைன் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அமெரிக்க – ரஷ்ய தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் உலகளவில் காணப்படும் பதற்ற நிலையை தணியுமென எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2018 15:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க