கட்டுநாயக்கவில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்பு
Related Articles
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 64 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சவூதி ரியால், பிரித்தானிய பவுன் மற்றும் யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த குறித்த இரு சந்தேக நபர்களும் கடும் எச்சரிப்பின் பின் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.