திம்புள்ளை பத்தன – மவுண்ட்வர்னன் தோட்ட அதிகாரியொருவர் குளவித்தாக்கியதில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 57 வயதான இரு பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான அவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக திம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளார். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளவி தாக்கியதில் தோட்ட அதிகாரி பலி
படிக்க 0 நிமிடங்கள்