fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புறக்கோட்டையிலுள்ள இரு வர்த்தக நிலையங்களில் தீ

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2018 11:54

புறக்கோட்டையிலுள்ள இரு வர்த்தக நிலையங்களில் தீ

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதான வீதியிலுள்ள திரைச்சீலை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றிலும் அதன் பக்கத்து வர்த்தக நிலையத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரு மாடிகளை கொண்ட கட்டடத்தொகுதியில் தீ பரவியுள்ளது. அதில் கீழ் மாடியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயணைப்பு படைப்பிரிவை சேர்ந்த 6 வாகனங்களை பயன்படுத்தி, 15 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டடத்தின் மேல் மாடியில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை தீ விபத்து காரணமாக பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2018 11:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க