fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுழியோடியொருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2018 15:54

குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுழியோடியொருவர் உயிரிழப்பு

தாய்லாந்து குகைக்குள்ள சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுழியோடி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் பயன்படுத்திய ஒக்சிஜன் முடிவடைந்ததால் சுழியோடி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தையடுத்து மீட்பு பணிகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களை மீட்பதற்காக வெளிநாடுகளிலிருந்தும் கடற்படை வீரர்கள் பலர் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர். ஆயிர்த்திற்கு மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களும் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை குகைக்குள் ஒக்சிஜனின் அளவு குறைவடைந்துள்ளதால் தேவையான ஒக்சிஜனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 6, 2018 15:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க