மெக்சிகோவில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 31 பேர காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் தீயணைப்பு படை வீரர்கள் நால்வரும், இரு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக மெக்சிகோ தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த ஏனையவர்கள் குறித்த பட்டாசு களஞ்சியசாலையில் பணியில் இருந்தவர்களென தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தபபட்டுள்ளது. தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெக்சிகோ செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவில் பட்டாசு தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்தில் 19 பேர் பலி
படிக்க 0 நிமிடங்கள்