பாடசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென கல்வி மேற்பார்வை சபையை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்போது அரச , தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஒழுங்கபடுத்தப்படவுள்ளன.
நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் அரசாங்காத்தின் கொள்கைக்கு அமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் கொள்கை திட்டமிடல் மற்றும் செயற்திறன் ஆய்வு தொடர்பான மேலதிக செயலாளர் பேராசிரியர் மதுரா வேஹேல்ல தெரிவித்துள்ளார். ஒழுங்குபடுத்தல் நடவடிக்கையின் போது ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக மாகாணரீதியில் பாடசாலை ஒழுங்கு படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.