fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2018 15:40

தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த இருவர் கைது

தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து 40 இலட்சம் ரூபா பண மோசடி செய்த இருவர் கடவத்தை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடவத்தை பகுதியில் நிறுவனமொன்றை நடாத்திச்சென்ற இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இருவரும் கைதுசெய்யப்பட்டனர். கப்பலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த 19 பேரிடமிருந்து அவர் குறித்த பணத்தொகையை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. கைதான இருவரும் ரம்புக்கனை மற்றும் மாவனல்ல பகுதிகளை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2018 15:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க