எல்ரீரீஈ அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவையில்லை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 20:42

எல்ரீரீஈ அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவையில்லை

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்க போவதில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று பாராளுமன்றத்திரல் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார

நாம் என்றும் இந்த நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வந்துள்ளோம். இது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். தடைசெய்யப்பட்ட எல்ரீரீஈ அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவையில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டையும் பௌத்த மதத்திற்குள்ள இடத்தையும் பாதுகாத்து இந்த நாட்டில் வாழும் அனைத்து மத மக்களினதும் அரசியல் ரீதியான அடிப்படை உரிமைகளை பெற்று கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு தொடர்பான பிரச்சினையையும் தீர்க்கவுள்ளோம். காணி வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கம் தேவையான நடவடிக்கைளை மே;றகொண்டு வருகின்றது. அவருடைய உரை தொடர்பாக நாம் உடன் கவனம் செலுத்துவோம். எமது அரசியல் பீடம் கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தது. அவரை சந்தித்த பின்னர் தேவையான நடவடிக்களை எடுப்போம். பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குழைக்க முடியாது. நீங்கள் நேற்று இதனை பாதுகாத்தீர்கள். 600 பொலிசாரை கொலை செய்த கருணாவை அழைத்து nஅவருக்கு கட்சியின் உபதலைவர் பதவியை வழங்கி, பிரபாகரனுக்கு பணம் வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியவர்கள், எல்ரீரீயினரை தோல்வியடையச்செய்த இராணுவ தளபதியை சிறையில் அடைத்தால் இன்று இதுபற்றி எவ்வாறு பேச முடியும்? சரத் பொன்சேக்காவின் அரசியல் பலிவாங்கல் தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றை எழுதி நாம் கையொப்பம் இட்டு அரை ஏன் பழி வாங்கினிர்கள் என கேட்க வேண்டும். நிவ்யோர்க் டைம்ஸ் கதையை நிறுத்தவே நேற்று குழப்பம் விளைவித்தார்கள் என தெரியும் என குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 20:42

Default