fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரானுக்கும் உலக நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 16:33

ஈரானுக்கும் உலக நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை

ஈரானுக்கும் உலக நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ஈரானின் அணுவாயுத செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன. சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. கடந்த 2015ம் ஆண்டு அணுவாயுத செயற்பாட்டை கைவிடும் ஒப்பந்தத்தில் ஈரான் கைச்சாத்திட்டது. எனினும் ஒப்பந்தம் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டு அமெரிக்கா இரு மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. இந்நிலையில் ஈரானுடன் ஏனைய 5 நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளமை தொடர்பில் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தத்தை பேணவேண்டுமென பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2018 16:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க