fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தன்னுடைய சாதனையை தானே தகர்த்தெறிந்த பிஞ்ச்-இரசிகர்களுக்கு உத்வேகத்தை ஊட்டிய போட்டி

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 15:47

தன்னுடைய சாதனையை தானே தகர்த்தெறிந்த  பிஞ்ச்-இரசிகர்களுக்கு உத்வேகத்தை ஊட்டிய போட்டி

சிம்பாப்வே அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் முக்கோண டி-20 போட்டியில் இன்று சிம்பாப்வே மற்றும் ஆஸி அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே ஆஸி அணியை முதலில் துடுப்பெடுத்துமாறு பணித்தது.அதன்படி களமிறங்கிய ஆஸி அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.முசரபாணி 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.இப்போட்டியில் ஆஸி அணி 2 சாதனைகளை படைத்துள்ளது.முதலாவது விக்கட்டுக்காக 223 ஓட்டங்களை எரோன் பிஞ்சும், ஷோட்டும் இணைந்து பகிர்ந்து கொண்டனர்.இதுவே டி-20 போட்டியில் அதிக இணைப்பாட்ட ஓட்டமாக கிரிக்கட் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.ஏற்கனவே2016ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி ஹெமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற டி-20 போட்டியில் மார்டின் கப்டில் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் ஆட்டமிழக்காமல் இணைப்பாட்டமாக 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதே சாதனையாக இருந்தது.அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் டி-20 போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை விலாசிய வீரராகவும் எரோன் பிஞ்ச் இடம்பிடித்துள்ளார்.அவர் இன்றைய போட்டியில் சிம்பாப்வே அணிக்கெதிராக 76 பந்துகளை எதிர்கொண்டு 172 ஓட்டங்களை பெற்றுள்ளார்.கடந்த 2013 ஓகஸ்ட் 29ஆம் திகதி சௌதம்ப்டணில் வைத்து இந்கிலாந்து அணிக்கெதிராக 63 பந்துகளுக்கு 156 ஓட்டங்களை பெற்றிருந்தார்.அதுவே அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் சாதனையாக இருந்தது.தன்னுடைய அந்த சாதனையை இன்று முறிடித்து சாதனை படைத்துள்ளார்.

 

230 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுள்ளது.இப்போட்டியில் ஆஸி அணி 100 ஓட்டங்களினால் சாதனை வெற்றியை பதிந்து கொண்டது.கடந்த இங்கிலாந்து தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆஸி அணி மீண்டும் தன்னுடைய அதிரடியை ஆரம்பித்துள்ளது ஆஸி இரசிகர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஊட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 15:47

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க