fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆயுர்வேத மருந்தகத்தில் இருந்து 1700 போதை வில்லைகள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 14:30

ஆயுர்வேத மருந்தகத்தில் இருந்து 1700 போதை வில்லைகள் மீட்பு

மாரவில பகுதியில் ஆயுர்வேத மருந்தக விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து 1700 போதை பொருள் வில்லைகள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டன. மாரவில பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதை பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டன.

இதன் பெறுமதி ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவாகும். போதை பொருள் வில்லைகள் அடங்கிய பக்கட்டுக்களில் போலி லேபல்களும் ஒட்டப்பட்டிருந்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர் மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 14:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க