fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குகையில் நிர்கதிக்குள்ளாகிய சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 14:26

குகையில் நிர்கதிக்குள்ளாகிய சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்பு

தாய்லாந்து குகையில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சிறுவர்கள் 11 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். தாய்லாந்தின் ஷியெங்ராய் பகுதியில் உள்ள குகையொன்றில் இவர்கள் நிர்கதிக்குள்ளாகினர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கடந்த 23ஆம் திகதி காணாமல் போயிருந்தனர். சுமார் ஒன்பது நாட்கள் இவர்கள் அந்த குகையில் நிர்கதிக்குள்ளாகியிருந்தனர். இவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்;ட இரு பிரித்தானிய நாட்டவர்களுக்கு இந்த சிறுவர்களை குகையொன்றில் கண்டெடுக்க முடிந்தது. இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வைத்திய சிகிச்சைகளை வழங்குவதவற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சிறுவர்களையும் பயிற்சியாளரையும் தேடும் நடவடிக்கையில் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட சர்வதேச மீட்பு குழுவினரும் சுழியோடிகளும் இணைந்திருந்தனர். பலத்த மழை காரணமாக சேற்று மண், மற்றும் நீர் என்பன பெருக்கெடுத்தமையினால் இவர்களை அங்கிருந்து மீட்பதில் சிரமங்கள் காணப்பட்டதாக தாய்லாந்து மீட்பு குழுவினர் தெரிவித்தனர். நீர் அங்கிருந்து அகற்றப்பட்டதன் பின்னர் குகைள் இருந்து இவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2018 14:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க