fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் பெட்டிகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவர்-அமைச்சர் நிமல்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2018 15:07

ரயில் பெட்டிகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவர்-அமைச்சர் நிமல்

ரயில் பெட்டிகளின் பாதுகாப்பு கருதி சிவில் உடைகள் அணிந்த ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த போவதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக நாங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. கடந்த தடவை 3 நாட்களில் 12 ரயில் பெட்டிகளை நாங்கள் திருத்தினோம். ரயில் பெட்டிகளுக்கு சேதம் விளைவிப்போரை கைது செய்வதற்காக நான் சிவில் உடையில் பாதுகாப்பு அதிகாரிகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளேன். அத்துடன் அரசாங்க சொத்துக்கள் சட்ட மூலத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். இது போன்ற நபர்களை உடனடியாக எம்மிடம் பொதுமக்கள் பிடித்து ஒப்படைக்க வேண்டு:ம்.)

நவீனமயப்படுத்தப்பட்ட 10 ரயில் எஞ்சின்களை சேவையில் இணைத்துக் கொள்ளும் வைபவத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கோட்டையிலிருந்து மாத்தறை நோக்கி இவ் ரயில் பயணமானது. உள்ளுர் கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சேதமடைந்த 200 ரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்தும் திட்டம் கடந்த வருடம் ஆரம்பமாகியது. இதுவரை 25 பெட்டிகள் நவீனமயப்படுத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ஒரு ரயில் பெட்டியை நவீனமயப்படுத்துவதற்கு 14 மில்லியன் ரூபா செலவாவதுடன் அதனை இறக்குமதி செய்வதற்கு 60 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. இத்திட்டத்திற்காக அரசாங்கம் 2.4 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2018 15:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க