fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இதற்கெதிராக இனி கடும் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2018 14:54

இதற்கெதிராக இனி கடும் நடவடிக்கை

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் யாசகம் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை டுக்கப்படுமென ரயில்வே பதில் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சட்டவிரோத வர்த்தகம் புரிவதற்கும் யாசகத்தில் ஈடுபடுவதற்கும் நேற்று முதல் முழுiமாக தடை விதிக்கப்பட்டது. இதனை தடுப்பதற்காக பாதுகாப்ப ஊழியர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயணிகளின் நலன் கருதியே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் யாசகத்தில் ஈடுபடுவதற்கும் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சட்டமூலத்தின் பிரகாரம் இந்நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது. ரயிலில் முடிச்சுமாறிகளுக்கு உதவியளிப்பதன் காரணமாகவே யாசகர்களுக்கு யாசகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

ரயில்வே திணைக்களத்தின் இ;ந்நடவடிக்கைகளுக்கு ரயில் பயணிகள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுவொரு காலோசிதமான திட்டம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2018 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க