fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காணி மற்றும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்-அமைச்சர் ராஜித

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2018 14:37

காணி மற்றும் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்-அமைச்சர் ராஜித

தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு காணி மற்றும் வீடு வழங்கப்பட வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை உரிமையாக வழங்கப்படுவது அரசாங்கத்தின் கடமையாகும். ஒவ்வொரு கர்ப்பணி தாய்மாருக்கும் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான போசாக்கு பொதி அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. கடந்த ஆட்சியில் இவை வழங்கப்படவில்லை. இவையெல்லாம் வழங்கியும் அரசாங்கம் விமர்சிக்கப்படுகின்றது. போசாக்கு பொதி யார் வழங்குகின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தற்போது வழங்கப்படும் பிஸ்கட்டும் ராஜபக்ஷமாரே வழங்குகின்றார்கள் என கருதப்படலாம். இவ்வாறு கருதுவதற்கு காரணம் பத்திரிகைகளேயாகும். எமது அரசாங்கம் ஒன்றுமே செய்வதில்லை. ராஜபக்ஷமார்கள்தான் இதனை செய்கின்றார்கள் என பத்திரிகையில் தெரிவிக்கப்படுகின்றன. ராஜபக்ஷமார்கள் கொடுத்ததை விட அதிகம் எடுத்தார்கள். அதனால் எங்களுக்கு வழங்க நிதியிருக்கவில்லை. எமக்கு நிதி வானத்திலிருந்து வரவில்லை. ஆனாலும் கூட மக்களுக்கான பொறுப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது எனவும் அமைச்சர் குறிட்டார்.

களுத்துறை தெபுவன, அரபலகந்த அரித்த வீட்டு திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார். 317 இலட்சம் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது. 29 வீடுகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தோட்டப்புற சிறுவர்களின் நலன் கருதி டிக்கிரி சக்தி போசாக்கு பிஸ்கட் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2018 14:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க