உத்தரகண்ட் அருகே இருக்கும் நனிதண்டா என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சென்ற பேரூந்து சாலை விளிம்பில் சென்றதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.இந்த விபத்தில் இதவரை 47 பேர் பலியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.12 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பேரூந்திலிருந்த ஏனையேரின் என்னவென இதவரை தெரிய வரவில்லை.இருந்தும் மீட்பு பணியாளர்கள் தீயணைப்பு படையினர் ஸ்தலத்தில் வேகமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளம் ஆழமாக இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.அதேநேரம் பலியானவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்ககின்றன.

பேரூந்து விபத்து-47 பேர் பலி-12 பேர் படுகாயம்.
படிக்க 1 நிமிடங்கள்