fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜாம்பவான்களின் கனவு சிதறியது-இன்று கால்பந்தாடும் அணிகள்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2018 09:49

ஜாம்பவான்களின் கனவு சிதறியது-இன்று கால்பந்தாடும் அணிகள்.

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில் அதில் 16 அணிகள் நொக் அவுட்டுக்குள் நுழைந்தன.இந்நிலையில் நேற்று ஆரம்பமான நொக்அவுட் சுற்றில் உலக கிண்ண ஜாம்பவான்களாக திகழும் ஆர்ஜண்டினா மற்றும் போர்த்துக்கல் அணிகள் ஒரு போட்டியின் தோல்வியோடு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.நேற்று இந்த தொடரின் 49 ஆவது போட்டியாக இடம்பெற்ற போட்டியில் உருகுவே எதிர் போர்த்துக்கல் அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-1 எனும் அடிப்படையில் வெற்றியீட்டி உருகுவே போர்த்துக்கலை வெளியேற்றியது.50 ஆவது போட்டியாக இடம்பெற்ற போட்டியில் பிராண்ஸ் ஆர்ஜண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.இப்போட்டியில் 4-3 எனும் அடிப்படையில் பிராண்ஸ் ஆர்ஜண்டினாவை வெளியேற்றியது.கிறிஸ்யொனோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸி ஆகியோர் தங்களுடை அணியின் வெற்றிக்காக போராடிய பேகாதும் நேற்றைய போட்டி அவர்கயுக்கு அதிஸ்டத்தை வழங்கவில்லை.இது அந்த இணியின் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸி ஆகியோரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை தோற்றுவித்துள்ளது.ஏற்கனவே ஜேர்மன் அணி தொடரில் தோல்வியுற்று வெளியேறி இருந்தமையும் இம்முறை இடம்பெறும் கால்பந்து தொடரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில்

இரவு 7.30 க்கு
ஸ்பெயின் எதிர் ரஷ்யா

மற்றும்

இரவு 11.30க்கு
குரோஷியா எதிர் டென்மார்க்

அணிகள் மோதவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2018 09:49

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க