கஞ்சா கலந்த பாபுளுடன் ஒருவர் கைது

கஞ்சா கலந்த பாபுளுடன் ஒருவர் கைது 0

🕔13:21, 29.ஜூன் 2018

கஞ்சா போதைப்பொருள் கலந்த ஒரு கிலோ பாபுல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை வைத்திருந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே கஞ்சா கலந்த பாபுல் கைப்பற்றப்பட்டுள்ளது. பேலியகொட, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தேடுதலை மேற்கொண்டனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு 900 ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம்

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு 900 ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம் 0

🕔13:17, 29.ஜூன் 2018

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்காக 900 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜுலை மாதம் இறுதியில் புதிய ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்களென சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துகொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர்

Read Full Article
உலக கிண்ண கால்ப்பந்தாட்ட நொக் அவுட் சுற்றில் 6 செம்பியன்கள்

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட நொக் அவுட் சுற்றில் 6 செம்பியன்கள் 0

🕔13:15, 29.ஜூன் 2018

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் செம்பியன்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமையவுள்ளன. 16 அணிகள் பங்கேற்கவுள்ள நொக் அவுட் சுற்று பிரிவிலிருந்து 8 அணிகள் காலிறுதி போட்டிக்காக

Read Full Article
மாத்தறை கொள்ளை சம்பவம் : பிரதான சந்தேக நபரின் மனைவி கைது

மாத்தறை கொள்ளை சம்பவம் : பிரதான சந்தேக நபரின் மனைவி கைது 0

🕔13:09, 29.ஜூன் 2018

மாத்தறை தங்க ஆபரண விற்பனை நிலைய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹபரகட வசந்த எனப்படும் சந்தேக நபரின் வீட்டை சோதனைக்குட்படுத்தினர். இதன்போது ரிவோல்வர் ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

Read Full Article
பாடசாலை வேன்களின் உரிமையாளர்களுக்கு அரச கடன் திட்டம்

பாடசாலை வேன்களின் உரிமையாளர்களுக்கு அரச கடன் திட்டம் 0

🕔13:05, 29.ஜூன் 2018

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன்களின் உரிமையாளர்களுக்கு 28 ஆசனங்களை கொண்ட பஸ் வண்டியொன்றை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் கடன் திட்ட முறையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்கீழ் பாடசாலை வேன்களின் உரிமையாளர்களுக்கு 40 இலட்சம் ரூபா நிவாரண கடனை அரச வங்கிகளினூடாக பெற்றுக்கொள்ள முடியும். குறித்த கடனை 5 வருட காலப்பகுதிக்குள் மீள செலுத்தும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
நைஜீரியாவில் எண்ணெய் லொறி தீ விபத்து : 9 பேர் பலி

நைஜீரியாவில் எண்ணெய் லொறி தீ விபத்து : 9 பேர் பலி 0

🕔13:04, 29.ஜூன் 2018

நைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிச்சென்ற லொறியொன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. லாகோஸ் நகரில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த எண்ணெய் தாங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டு சற்று நேரத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த தீ அருகிலிருந்த வாகனங்கள் மீதும் பரவியதையடுத்து 5 பஸ்கள்,

Read Full Article
விவசாயிகளுக்கு காப்புறுதி நிதியை வழங்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு காப்புறுதி நிதியை வழங்க நடவடிக்கை 0

🕔12:27, 29.ஜூன் 2018

விவசாய காப்புறுதி நிதியை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சான்று பத்திரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை விவசாய மற்றும் கமநல சேவைகள் காப்புறுதி சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விவசாய காப்புறுதி சான்று பத்திரங்களை விரைவில் விவசாயிகளிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் விவசாயிகள் எதிர்கொண்ட நட்டங்களுக்காக 145

Read Full Article
அமெரிக்க பிரபல செய்தி நிறுவனம் மீது தாக்குதல் : ஐவர் பலி

அமெரிக்க பிரபல செய்தி நிறுவனம் மீது தாக்குதல் : ஐவர் பலி 0

🕔12:21, 29.ஜூன் 2018

அமெரிக்காவின் மேரிலண்ட் பத்திரிக்கை காரியாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தை உடைத்து உள்நுழைந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் அமெரிக்க பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
ஆயுர்வேத மருந்தகங்கங்களை நவீனமயப்படுத்துவதற்கான புதிய சட்டம்

ஆயுர்வேத மருந்தகங்கங்களை நவீனமயப்படுத்துவதற்கான புதிய சட்டம் 0

🕔12:11, 29.ஜூன் 2018

ஆயுர்வேத மருந்தகங்கங்களை நவீனமயப்படுத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருந்தகங்களின் தரத்தை உயர்ந்த மட்டத்தில் பேணுவதே இதன் நோக்கமாகும். கொழும்பை சூழவுள்ள மற்றும் வெளி மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயுர்வேத மருந்தகங்கள் அசுத்தமான நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. மருந்து உற்பத்திக்கென பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் முறையாக களஞ்சியப்படுத்தி வைக்கப்படாமையினால் அவற்றின் தரம் குறைவதோடு,

Read Full Article
பொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்

பொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் 0

🕔12:07, 29.ஜூன் 2018

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்களை உலக வங்கி பட்டியலிட்டுள்ளது. இந்த விடயங்களில் ஏற்றுமதியை அதிகரித்தல், முதலீட்டை கூட்டுதல், ஆட்சி நிர்வாகத்தை விருத்தி செய்தல், கடன் அபாயங்களை சமாளித்தல் போன்றவை முன்னுரிமை

Read Full Article

Default