fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு புதிய சுற்றுநிரூபம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 15:41

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு புதிய சுற்றுநிரூபம்

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படுமென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு உள்ளுராட்சி உறுப்பினர்களின் பங்களிப்பை உரிய முறையில் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைவதால் மோதல்நிலை ஏற்படக்கூடிய சூழல் காணப்படுகிறது. இதனால் உள்ளுராட்சி மன்றத்தின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் விதத்தில் சுற்றுநிரூபம் வெளியிடப்படும்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றங்களில் முன்வைக்கப்படும் திட்டங்களை ஒருங்கிணைப்பு குழுவிடம் ஒப்படைக்கும் பொறுப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இதேவேளை புதிய சுற்றுநிரூபத்துக்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியமென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2018 15:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க