அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைதுசெய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பணிப்புரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும் அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்