கஞ்சா போதைப்பொருள் கலந்த ஒரு கிலோ பாபுல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை வைத்திருந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே கஞ்சா கலந்த பாபுல் கைப்பற்றப்பட்டுள்ளது. பேலியகொட, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தேடுதலை மேற்கொண்டனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா கலந்த பாபுளுடன் ஒருவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்