உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் செம்பியன்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமையவுள்ளன. 16 அணிகள் பங்கேற்கவுள்ள நொக் அவுட் சுற்று பிரிவிலிருந்து 8 அணிகள் காலிறுதி போட்டிக்காக தெரிவுசெய்யப்படும். அதில் வெற்றிப்பெறும் நான்கு அணிகள் அரையிறுதி போட்டியில் மோதும். இறுதியாக இரு அணிகள் செம்பியன் கிண்ணத்துக்கான பலப்பரீட்சையில் ஈடுபடும். நொக் அவுட் சுற்றின் முதல் இரு போட்டிகள் நாளை இடம்பெறவுள்ளன.
பிரான்ஸ் மற்றும் ஆர்ஜண்டினா அணிகளுக்கிடையிலான போட்டி முதலாவதாகவும், உருகுவே மற்றும் போர்த்துக்கள் அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாவதாகவும் நடைபெறும். இரு போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த வீரர்கள் இருவர் கலந்துகொள்ளவுள்ளனர். ஆர்ஜண்டினா சார்பாக லயனல் மெஸ்ஸியும், போர்த்துக்கள் சார்பாக க்ரிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை நாளை இடம்பெறவுள்ள போட்டியில் ஆர்ஜண்டினாவும், போர்த்துக்களும் வெற்றிப்பெறும் பட்சத்தில் இரு அணிகளும் காலிறுதியில் மோதும். இதன்போது மெஸ்ஸியும், ரொனால்டோவும் நேர் எதிரே விளையாடுவதை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.