அமெரிக்காவின் மேரிலண்ட் பத்திரிக்கை காரியாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தை உடைத்து உள்நுழைந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் அமெரிக்க பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பிரபல செய்தி நிறுவனம் மீது தாக்குதல் : ஐவர் பலி
படிக்க 0 நிமிடங்கள்