மும்பையில் நடைபெற்று வரும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார். இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்றனர்.
நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாசும் பொது இடங்களில் அவ்வப்போது சுற்றி வருவதால், இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வரும் நிலையில், இருவரும் ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.